பத்திரிகை தகவல் அலுவலகம் (Press Information Bureau) என்பது அரசின் கொள்கைகள், திட்டங்கள், முன்முயற்சிகள், சாதனைகள் பற்றிய தகவல்களை அச்சு, மின்னணு ஊடகங்களுக்கு வழங்கும் ஒன்றிய அரசின் இணைய நிறுவனமாகும்.
இந்நிறுவனம், அரசுக்கும் ஊடகத்திற்கும் பாலமாக செயல்படுகிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், சண்டிகர், பெங்களூரூ, புவனேஷ்வர், அகமதாபாத், கவுகாத்தி, திருவனந்தபுரம், இம்பால் ஆகியவற்றை 12 மண்டலங்களாக பிரித்து செயல்பட்டு வருகிறது.
அரசின் தகவல்களை கொடுப்பது மட்டுமில்லாமல் இணையத்தில் அரசின் திட்டங்கள், சாதனைகள், கொள்கைகள் குறித்து பரப்பப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிச்செய்யும் (Fact check) பணியையும் இணையதளம், ட்விட்டர் பக்கம் மூலம் செய்து வருகிறது. இந்நிலையில், அதன் புதிய முன்னெடுப்பாக டெலிகிராம் செயலியில் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தை நேற்று முன் தினம் (செப். 13) திறந்துள்ளது.
-
From busting fake #Telegram channels in our names to officially coming on that platform, we've come a full circle!
— PIB Fact Check (@PIBFactCheck) September 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Yes, #PIBFactCheck is now officially on Telegram
Join our channel https://t.co/zxufu0SIzG and get all the latest fact-checks related to the Government of India pic.twitter.com/JaE5jzrF3N
">From busting fake #Telegram channels in our names to officially coming on that platform, we've come a full circle!
— PIB Fact Check (@PIBFactCheck) September 13, 2021
Yes, #PIBFactCheck is now officially on Telegram
Join our channel https://t.co/zxufu0SIzG and get all the latest fact-checks related to the Government of India pic.twitter.com/JaE5jzrF3NFrom busting fake #Telegram channels in our names to officially coming on that platform, we've come a full circle!
— PIB Fact Check (@PIBFactCheck) September 13, 2021
Yes, #PIBFactCheck is now officially on Telegram
Join our channel https://t.co/zxufu0SIzG and get all the latest fact-checks related to the Government of India pic.twitter.com/JaE5jzrF3N
அந்த பக்கத்தில், அரசின் தகவல் / செய்தி குறித்து கேள்வி எழுப்பினால், அந்த தகவல் / செய்தி குறித்த உண்மைத் தகவலை பிஐபி உறுதிப்படுத்தும். இதனை PIB FACT CHECK தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க : டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது...