கேரள மாநில முதலமைச்சராக பினராயி விஜயன் இன்று பதவியேற்றுக்கொண்டார். கேரள மாநில முதலமைச்சராக பினராயி விஜயன் தொடர்ந்து இரண்டாவது முறை இன்று (மே 20) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போது 'மனசாட்சிப்படி நடப்பேன்’ என்று சொல்லி, பினராயி விஜயன் பதவியேற்றுள்ளார்.
பினராயி விஜயனுடன் சேர்த்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 21 பேரும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். கடந்தமுறை அமைச்சரவையிலிருந்த யாருக்கும் (பினராயி விஜயனைத் தவிர) மறுவாய்ப்பு தரப்படாமல், புதிய நபர்களே புதிய பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க:கேரள அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் மறுப்பு: பின்னணி என்ன?
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியான எல்.டி.எஃப். கூட்டணி 99 இடங்களை வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.
பெரும்பாலான இந்திய முதலமைச்சர்கள் தங்களின் பதவியேற்பின்போது 'இறைவன் மீது ஆணையாக' என்று கூறி தங்கள் பதவியை ஏற்றுக்கொள்வர். ஆனால், அண்மையில் தமிழ்நாட்டில் நடந்த பதவியேற்பு விழாவின்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உளமாற' என்று கூறி பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் ஸ்டாலினைப் போல், பினராயி விஜயனும் கடவுளைப் பற்றி குறிப்பிடாமல், மனசாட்சியைக் குறிப்பிட்டு பதவியேற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: வரலாற்றை மாற்றி எழுதி செங்கொடியைப் பறக்கவிட்டார் பினராயி