உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி பகுதியில் மாவட்ட ஹோமியோ மருத்துவத் துறையில் மூத்த உதவியாளராகப் பணி செய்துவருபவர் ப்ரீதம் கய்ரோலா. இவருக்கு நவ.27ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக முன்னதாகவே விடுமுறை பெற்றிருந்தார்.
இதனால் நவ.26ஆம் தேதி திருமண சடங்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிலையில் அலுவலகத்தில் உள்ள சில பணிகளை முடிப்பதற்காக திருமண சடங்குகள் நடந்த அதே உடையோடு அலுவலகம் வந்துள்ளார்.
இவரது துறையிலிருந்து சில தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டியிருந்துள்ளது. இவருக்குத்தான் அனைத்துத் தகவல்களும் தெரியும் என்பதால், அந்த வேலைகளை முடிப்பதற்காக இவர் அலுவலகம் வந்து ஒன்றரை மணி நேரம் பணிசெய்துள்ளார்.
அந்த நேரத்தில் இவரோடு பணியாற்றிய சிலர் திருமண உடையோடு இவர் பணி செய்ததைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்தப் புகைப்படம் வைரலாக, மூத்த நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: பஹாடி உடை...குடும்பத்துடன் பாரம்பரிய நடனமாடிய கங்கனா