ETV Bharat / bharat

வரி குறைப்புக்கு பின் பெட்ரோல், டீசல் விலை - சென்னை நிலவரம் என்ன? - கலால் வரி குறைப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 45 நாள்களுக்கு பின் குறைந்துள்ளது.

குறைந்த பெட்ரோல், டீசல் விலை - சென்னை விலை நிலவரம்!

author img

By

Published : May 22, 2022, 6:53 AM IST

Updated : May 23, 2022, 8:30 AM IST

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று (மே 21) வெளியிட்டார். அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று (மே 22) பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 8.22 ரூபாய் குறைந்து, 102.63 ரூபாயாக விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 6.70 ரூபாய் குறைந்து 94.24 ரூபாயாக விற்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 9.50 ரூபாய் குறைந்து 96.72 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 7 ரூபாய் குறைந்து, 89.62 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 111.35 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 97.28 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:"மக்கள் நலனே எங்களுக்கு முதன்மை" - பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

Last Updated : May 23, 2022, 8:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.