தெலங்கானா தலைநகர் ஹைதாபாத்தில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. ஹைதராபாத்தை கைப்பற்றுவதில் பாஜக மிகவும் தீவிரமாகவுள்ளது. உள் துறை அமைச்சர் அமித் ஷா, உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் நேரடியாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி இன்று தேர்தல் பரப்புரைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, "மக்களவைத் தேர்தலில் தெலங்கானா மக்கள் மோடியை ஆதரித்த விதம் இங்கு மாற்றத்திற்கான ஆரம்பம் தொடங்கிவிட்டதை உணர்த்தும் வகையில் இருந்தது.
சமீபத்தில் பெய்த மழையில் ஹைதராபாத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆளும் டி.ஆர்.எஸ். கட்சியின் ஆசீர்வாதத்துடன் ஆக்கிரமிப்புகள் இங்கு அதிகரித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் டி.ஆர்.எஸ். மீதும் ஓவைசி மீதும் கோபத்தில் உள்ளனர்.
ஹைதராபாத் மக்கள் பாஜகவுக்கு ஒரு வாயப்பை அளிக்க வேண்டும். நிஜம் கலாசாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும். பாஜகவைச் சேர்ந்தவர் ஹைதராபாத்தின் அடுத்த மேயராக அதிக வாய்ப்புகள் உள்ளன" என்றார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தெலங்கானாவிலிருந்து நான்கு இடங்களை வெற்றி பெற்றிருந்தது.
இதையும் படிங்க: "ஆறு ஆண்டுகளில் 18 ஆயிரம் கிமீ" - பெருமிதம் கொள்ளும் பியூஸ் கோயல்