பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் ரயிலில் அமர்ந்தபடி கோபி மஞ்சூரியன் சாப்பிட்டுள்ளார். இதனால் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், மெட்ரோ ரயில் விதிமுறைகளை மீறியதற்காக அப்பயணி மீது 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், ரயிலில் அமர்ந்து சாப்பிடக்கூடாது என அவரது நண்பர்கள் பலர் அறிவுறுத்தியும் அதனை கேட்காமல் அந்த பயணி சாப்பிடுவது வீடியோவில் பதிவாகியது. இந்நிலையில், ரயிலின் விதிகளை மீறியது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் ஜெயநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
தொடர்ந்து, அந்த பயணியிடம் 500 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டது. மேலும், இது போன்ற தவறை மீண்டும் நடக்காது என அப்பயணி கூறியதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை மெட்ரோ ரயிலில் இதுபோன்ற ஒரு சம்பபவம் நடைபெறவில்லை என்றும் இதுவே முதல் முறை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், “மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை ஆடியோ மற்றும் வீடியோவாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். விதிகளை மீறி பயணிகள் சிக்கலில் சிக்க வேண்டாம்” என கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: ரூ.450-க்கு 5 வகையான இனிப்புகள்.. ஆவின் கொடுக்கும் தீபாவளி கிப்ட் பேக்!