நாட்டின் முன்னணித் தலைவர்கள், ஊடகவியலாளர்களை பெகாசஸ் என்ற மென்பொருள் கொண்டு உளவு பார்த்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. தி வயர், வாஷிங்டன் போஸ்ட், கார்டியன் உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் இது தொடர்பான விசாரணைக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றன.
இந்த விவகராம் பூதாகரமாகக் கிளம்பியுள்ள நிலையில், தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் மோடி தலைமையிலான அரசும் இதன் பின்னணியில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தவுள்ளது.
வரும் 28ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் தலைமை தாங்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பம், உள் துறை அமைச்சகங்களின் அலுவலர்கள் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டில் எந்தவித முகாந்திரமும் இல்லை எனத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுத்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஜிலேபி சாப்பிடத் தடை' - ஆதங்கத்தில் ஐபிஎஸ் அதிகாரி... சிரிப்பலையில் ட்விட்டர்!