தெலங்கானா: ஜக்தியால் மாவட்டம் பலபள்ளி கிராமத்தை சேர்ந்த ஜக்குலா மது (23) என்பவரும் ரைக்கல் கிராமத்தை சேர்ந்த ஜுவாஜி அக்ஷிதா (20) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். அக்ஷிதா தனது பெற்றோர் அனுமதி இல்லாமல் தனது காதலனை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அக்ஷிதாவின் குடும்பத்தினர் இரண்டு காரில் வந்து மதுவின் குடும்பத்தினரை தாக்கி வலுக்கட்டாயமாக அக்ஷிதாவை காரில் கடத்திச் சென்றனர். மேலும் அக்ஷிதாவை கொடூரமாக தாக்கியதோடு அவருக்கு தலையில் மொட்டை அடித்தனர்.
இதனையடுத்து அக்ஷிதா ஜக்தியால் கிராம காவல் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் உதவியாளர் அனில் விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே, அக்ஷிதாவை அவரது கணவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: வீடியோ: கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு பிடி வீரரை தாக்க முற்பட்ட ராஜநாகம்