ETV Bharat / bharat

‘எளிமை அர்ப்பணிப்பின் உருவம் ஹீராபென் மோடி’ - தாயின் நினைவுகளை பகிர்ந்த மகன் - மோடியின் தாயார் ஹீராபென் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடி, தனது தாயாரின் இனிமையான நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

தாயின் நினைவுகளை நினைவு கூர்ந்த மகன்
தாயின் நினைவுகளை நினைவு கூர்ந்த மகன்
author img

By

Published : Dec 30, 2022, 11:37 AM IST

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 30) உயிரிழந்தார். ஹிராபா என்றும் அழைக்கப்படும் ஹீராபென் மோடி, பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் காந்திநகர் நகருக்கு அருகிலுள்ள ரைசன் கிராமத்தில் வசித்து வந்தார்.

கடந்த வாரம் முதலே அவரது உடல் நிலை மோசமான நிலையில், டிசம்பர் 28ஆம் தேதி அகமதாபாத்தில் யுஎன் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார்.

இவரது மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. என் அம்மாவிடம், ஒரு துறவியின் வாழ்க்கை பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன்.

அவருடைய 100ஆவது பிறந்தநாளில் அவரைச் சந்தித்தபோது, என்னிடம் ஒரு விஷயத்தை சொன்னார். அது எப்போதும் நினைவில் இருக்கும். "புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழுங்கள்" என்றார். அதுபோலவே, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்கிறோம், தூய்மையுடன் வாழ்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி கூறுகையில், “எனது அம்மா மிகவும் மத நம்பிக்கை கொண்டவர். அவர் தினமும் அதிகாலை எழுந்த உடன் பூஜை செய்த பிறகு ஜெபமாலையில் மந்திரங்களை உச்சரிப்பதை வாழ்வின் ஒரு அங்கமாக கொண்டவர். குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் புராணக் கதைகளைச் சொல்வார்.

ஆரோக்கியமான மற்றும் நோயற்ற வாழ்க்கையை நடத்தி வந்தார். அவர் 100 வயதிலும் மருந்துகளை உட்கொண்டதில்லை. கூர்மையான நினைவாற்றல் கொண்டவர். அவர் எப்போதும் வீட்டில் சமைத்த உணவை விரும்பி சாப்பிடுவார். சரியான நேரத்தில் உணவு உட்கொள்வார். வழக்கமான வாழ்க்கையை நடத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகளை அறிந்து கொள்ள செய்திகள் காண்பார் எனத் தெரிவித்தார்.

ஹீராபாவின் மூத்த மகன் சோம்பாய் மோடி குஜராத் சுகாதாரத் துறையில் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி, இரண்டாவது மகன் அம்ரித் மோடி இயந்திர ஆபரேட்டர், மூன்றாவது மகன் பிரஹலாத் மோடி தானிய வியாபாரி மற்றும் அவரது நான்காவது மகன் பிரதமர் நரேந்திர மோடி. அவரது இளைய மற்றும் ஐந்தாவது மகன் பங்கஜ் மோடி குஜராத் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க: வீடியோ: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.