ETV Bharat / bharat

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது - ஜம்மு காஷ்மீர் எல்லை

காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.

சர்வதேச எல்லையில் பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது

author img

By

Published : Aug 27, 2022, 10:29 AM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அர்னியா செக்டர் வழியாக ஒருவர் இந்திய எல்லைக்குள் நுழைவதை வீரர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து அர்னியா போலீசார் தரப்பில், கைது செய்யப்பட்டவர் பாகிஸ்தானின் சியால்கோட்டில் வசிக்கும் முகமது ஷபாத் (45). இவரிடம் ஆயுதங்களோ, வெடிமருத்துகளோ பறிமுதல் செய்யப்படவில்லை. அவரை மீண்டும் பாகிஸ்தானில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இதேபோல ஆகஸ்ட் 25ஆம் தேதி சம்பா மாவட்டம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து 8 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.