அகமதாபாத்: இதுகுறித்து மாநில மீன்வளத்துறை இயக்குநர் நிதின் சங்வான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் வரும் திங்கள்கிழமை(ஜூன் 20) பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, பஞ்சாபின் வாகா எல்லையில் இந்திய அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இதையடுத்து மீனவர்கள் குஜராத் மாநிலத்துக்கு அழைத்து வரப்படுவார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத் மாநில அரசின் புள்ளிவிவரங்களின்படி, அம்மாநிலத்தைச் சேர்ந்த 500 மீனவர்கள் பாகிஸ்தான் கடலோரப் படையால் கைது செய்யப்பட்ட சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 358 பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கைது செய்யப்பட்டவர்கள். சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் நாட்டின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மீன்பிடித் தடைக்காலம் நிறைவு - ஆழ்கடலுக்குள் செல்லத் தயாராகும் மீனவர்கள்