ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் அனுப்கார் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த நபரை நேற்று (மார்ச்5) எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக, எல்லை பாதுகாப்பு படை தரப்பில் வெளியான தகவலில், ’அனுப்கார் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் சுற்றித் திரிவது தொடர்பாக நேற்றிரவு தகவல் கிடைத்தது.
எல்லை பாதுகாப்பு படையினர் அந்நபரை சுற்றி வளைக்கவே, தப்பியோட முயன்ற அவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் உடல் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்படி விசாரணைகள் நடந்து வருகின்றன’ எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மேற்குவங்கத்தில் குண்டுவெடிப்பு: 6 பேர் காயம்!