டெல்லி: ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ உள்ளிட்டோர் அடங்கிய குழு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்க அமைக்கப்பட்டுள்ளது.
இதனைப் பாராட்டி ட்வீட் செய்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், "தமிழ்நாடு அரசு ஒரு பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
இந்தக் குழுவில் உள்ள பொருளாதார வல்லுனர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். இந்தக் குழுவை அமைத்தது சிறந்த நடவடிக்கை. இதை நான் பாராட்டி வரவேற்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனை குழு குறித்த அறிமுகம்