இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்தத் திட்டமானது ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு முடிவுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது.
ஆரம்ப மாதங்களில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. பின்னர், உற்பத்தி அதிகரிக்கப்பட்ட நிலையில், கடந்த இரு மாதங்களாக தினசரி தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை சராசரியாக 50 லட்சத்துக்கும் மேலாக உள்ளது.
இந்நிலையில், இன்று தடுப்பூசி திட்டம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நாட்டில் மொத்தம் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று மாலை நிலவரப்படி, மொத்தம் 90 கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இதில் 65 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 24.5 கோடி பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய மைல்கல்லை மகிழ்ச்சியளிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விமர்சனங்களை பெரிதும் மதிப்பவன் நான் - பிரதமர் மோடி