டெல்லி: இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கூறுகையில், மத்திய அரசு, நாட்டின் பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதனை சாதகமாக கொண்டு, பல்வேறு யூடியூப் சேனல்கள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பொய்யான தகவல்கள் பரப்பட்டுவருகின்றன.
அதன்காரணமாக, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் போலியான மற்றும் தேசவிரோத செய்திகளை வெளியிட்ட யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 60 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அதேபோல பத்திரிகையாளர்கள் நெறிமுறைகளை பின்பற்றி செய்திகளை வெளியிடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மீறுவோர் மீது பிரிவு 14ன் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் போலி செய்திகள் பரப்புவது தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்கள் வருகின்றன. இதனால் அரசு சார்பில் செய்தியின் உண்மைத்தன்மை சரிபார்ப்புப் பிரிவை நிறுவியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: 'கமலாலய பெட்ரோல் குண்டுவீச்சில் கூட்டுச்சதி - ரவுடியின் பின்னணியில் யார்? தேவை என்ஐஏ விசாரணை!'