இந்தியாவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் டெல்லியிலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லியில் புதிதாக மேலும் 22,751 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 179 பேர் குணமடைந்துள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை 14 லட்சத்து 63 ஆயிரத்து 837 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தச் சூழலிலும் டெல்லியில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெல்லி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உள்பட 300 க்கும் மேற்பட்ட டெல்லி காவல்துறை அலுவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதையும் படிங்க : புதிதாக வந்துள்ள ‘டெல்டாக்ரான்’- சைப்ரஸ் நாட்டில் பாதிப்பு உறுதி