மாநிலங்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் குறித்து ஒன்றிய சுகாதராத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மொத்த தடுப்பூசிகளின் விநியோகம், மாநிலங்களின் கையிருப்பு குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, "இதுவரை 42 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 730 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில், உபயோகம் போக இரண்டு கோடியே 60 லட்சத்து 12 ஆயிரத்து 352 தடுப்பூசிகள் மாநிலங்களின் கையிருப்பில் உள்ளன " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை தற்போது இலவசமாக விநியோகம் செய்து வருகின்றன.
இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 40 கோடியே 64 லட்சத்து 81 ஆயிரத்து 493 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 லட்சத்து 63 ஆயிரத்து 123 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரள அரசுக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு எச்சரிக்கை