பிகார் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தியாவில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் குற்றவாளிகள் போட்டியிடுவது தொடர்ந்துவருகிறது. இதைத்தடுக்க தேர்தல் ஆணையங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பிகார் சட்டப்பேரவை தேர்தலில், 371 பெண்கள் உள்பட மொத்தம் 3,733 பேர் போட்டியிட்டுள்ளனர். அவர்களில் 1,157 பேர் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் : பஞ்சாப்பில் விரைவில் ரயில் சேவை!