ETV Bharat / bharat

நிரம்பி வழியும் தகன மேடைகள்... பார்கிங்கில் 100-க்கும் மேற்பட்டோர் தகனம்

author img

By

Published : Apr 27, 2021, 1:14 PM IST

டெல்லி: கரோனாவால் உயிரிழந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோரின் சடலங்கள், ஒரே இடத்தில் தகனம்செய்யப்பட்ட அதிர்ச்சி காணொலி வெளியாகியுள்ளது.

Ghazipur crematorium
கரோனா

இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக, டெல்லியில் மட்டும் மூன்று நாள்களில் 1000-க்கும் மேற்பட்டோர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பால், தகனம் செய்வதற்கு இடமின்றி உள்ளூர் நிர்வாகங்கள் தவித்துவருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் காசிப்பூர் தகன மையம் பார்கிங் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் தகனம்செய்யப்பட்டுள்ளன. அந்தக் காணொலி பார்ப்போரை கரோனாவின் வீரியத்தை மக்களுக்குப் உணரவைக்கிறது.

காசிப்பூரில் ஏற்கனவே உள்ள 48 தகன மையங்களும் நிரம்பியுள்ளதால், தற்காலிக தகன மையத்தை காசிப்பூர் நிர்வாகம் அமைத்துள்ளது.

ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தகனம்

டெல்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, "திங்கள்கிழமை மாலை 5 மணி வரை நிலவரப்படி கரோனா பாதிப்பால் உயிரிழந்த 41 பேர் தகனம்செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சுமார் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளதை நம்மால் அந்தக் காணொலியில் காண முடிகிறது.

இதையும் படிங்க: 'கரோனா பரவலுக்கு மோடியும், தேர்தல் ஆணையமும் தான் காரணம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.