ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரின் அரசு இல்லத்தை காலி செய்ய உத்தரவு!! - Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தனது வழங்கப்பட்ட அரசு இல்லத்தை காலி செய்யும்படி ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரின் அரசு இல்லத்தை காலி செய்ய உத்தரவு

author img

By

Published : Oct 21, 2022, 10:54 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் நிர்வாகம், பிடிபி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியை ஃபேர்வியூ குப்காரில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், ஃபேர்வியூ இல்லத்தை வெளியேற்றுவது தொடர்பாக மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பிடிபி வட்டாரங்கள் தெரிவித்தன.

2002ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து முதல்வராகப் பதவியேற்றபோது, அவரது மறைந்த தந்தை முப்தி முஹம்மது சயீதுக்கு எஸ்டேட்ஸ் துறையால் பங்களா ஒதுக்கப்பட்டது, அப்போது முதல் ஸ்ரீநகரில் உள்ள ஃபேர்வியூ குக்பரில் மெகபூபா முஃப்தி வசித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக 2020 ஆம் ஆண்டில் எல்ஜி நிர்வாகத்தால் மெகபூபாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது, 2019ஆம் ஆண்டில் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதிலிருந்து அவருக்கு வழங்கப்பட்ட இரண்டாவது நோட்டீஸ் இதுவாகும். சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததையும், ஜேகே மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக்குவதையும் மெகபூபா எதிர்த்து வருகிறார்.

இதையும் படிங்க: தன்பாலின ஈர்ப்பு விவகாரம்; தகராறில் இளம்பெண்கள் காயம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.