ETV Bharat / bharat

இளம்பெண்ணை தாக்கிய சிறுத்தையை சுட்டுக்கொல்ல உத்தரவு - that attacked girl in Karnataka

கர்நாடகாவில், சிறுத்தை தாக்கி இளம்பெண் உயிரிழந்த நிலையில், அந்த சிறுத்தையை சுட்டுக்கொல்ல மாவட்ட வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 2, 2022, 11:05 AM IST

Updated : Dec 2, 2022, 11:43 AM IST

பெங்களூரு(கர்நாடகா): மைசூர் அருகே சில தினங்களுக்கு முன் ஒருவர் சிறுத்தை தாக்கி உயிரிழந்த நிலையில், நேற்று (டிச.1) இளம்பெண் ஒருவரை சிறுத்தை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டி.நரசீபூர் தாலுகா எஸ் கெப்பஹுண்டி கிராமத்தைச் சேர்ந்த மேக்னா(22) என்பவர் சிறுத்தை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். பல நாட்களாக அப்பகுதியில் பலரையும் அச்சுறுத்தி வந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வனத்துறையின் அலட்சியத்தால் இளம்பெண் உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய பெண்ணின் குடும்பத்தினர், அப்பகுதி பொதுமக்கள் என ஏராளாமனோர் நரசீபூர் அரசு மருத்துவமனை முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.7.5 லட்சம் நிவாரணம்: இதனிடையே, சிறுத்தை தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அத்துடன், சிறுத்தையை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மைசூர் வட்ட வன அலுவலர் மாலதி பிரியா தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு 12 மணி வரை நர்சீபூர் பொது மருத்துவமனை முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்திய இடத்தை பார்வையிட்ட மாலதி பிரியா, உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு அறிவித்தார். 5 லட்சத்திற்கான இழப்பீட்டுத் தொகையை சம்பவ இடத்திலேயே வழங்குவதாக கூறினார்.

நரசீபூர் அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டவர்களை சந்தித்த வன அலுவலர் மாலதி பிரியா, உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவதோடு, அக்குடும்பத்தில் ஒருவருக்கு அவுட்சோர்ஸ் அடிப்படையில் அரசு வேலையை வழங்குவதாகவும் தெரிவித்தார். மேலும், சிறுத்தையைப் பிடிக்க 15 பேர் கொண்ட வனக்குழுவினரை நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை புகார்: வங்கதேச சகோதரர்கள் கைது

Last Updated : Dec 2, 2022, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.