பெங்களூரு: கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களுக்கு ஜூன் 17 வரை பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுப் பிரிவின் இயக்குநர் சி.எஸ். பட்டில் தெரிவித்துள்ளார்.
இதனால் அம்மநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பட்டில் கூறியதாவது, “கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு கர்நாடகாவில் நேற்று (ஜூன் 13) பரவலாக மழை பெய்தது. மேலும் கர்நாடக மாநிலமும் முழுவதும் ஜூன் 13 முதல் 17 வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
உத்தர கன்னடம், உடுப்பி, தக்ஷின் கன்னடம், சிவமோகா, சிக்மகளூர் ஆகிய இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். இதற்காக ஆரஞ்சு எச்சரிக்கை ஜூன் 13 முதல் 17 வரை அறிவிக்கப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த தாழ்வான இடத்தில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வேறு பகுதிகளுக்கு செல்லுங்கள்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த 3 நாள்களில் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும், கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் எனக் கூறினார்.
மேலும் இன்று (ஜூன் 14) கொங்கன், கோவா பகுதிகளிலும், நாளை (ஜூன் 15) கடலோர கர்நாடகா மற்றும் மத்திய மகாராஷ்டிராவிலும் கனமழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களின் ஒத்துழைப்பால் கரோனா தொற்று குறைவு: மு.க.ஸ்டாலின்