இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு, சென்ட்ரல் விஸ்தா கட்டுமான பணியை முடுக்கிவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி, சரத் பவார், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், "பல்வேறு துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவை காணொலி காட்சி மூலம் கூட்ட வேண்டும். சென்ட்ரல் விஸ்தா கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கு ஒதுக்கிய நிதியை ஆக்சிஜன், தடுப்பூசிகளுக்கு ஒதுக்க வேண்டும்.
நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் வகையில் மையங்கள் அமைக்க வேண்டும். கரோனா காலத்தில் வேலையிழந்தவர்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
தடுப்பூசி வாங்குவதில் நாடு முழுவதும் ஒரே விலையை பின்பற்ற வேண்டும். ஆக்ஸிஜன், கரோனா தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு பி.எம்.கேர்ஸ் போன்றவற்றிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவை கட்டுப்படுத்த ஆலோசனை: ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்