ETV Bharat / bharat

Uniform Civil Code: பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடியின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு! - what is UCC

போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

UCC: பிரதமரின் பொது சிவில் சட்டம் குறித்த பேச்சு - வலுக்கும் கண்டனம்

author img

By

Published : Jun 28, 2023, 9:34 AM IST

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபாடி ரயில் நிலையத்தில் இருந்து 5 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 27) கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன் பின்னர், போபாலில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44வது பிரிவு மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் உடன் ஒத்துப் போகிறது. மக்களுக்கு இரண்டு விதமான விதிகள் இருந்தால் ஒரு குடும்பம் செயல்படுமா? பிறகு ஒரு நாடு எப்படி இயங்கும்? நமது அரசியலமைப்புச் சட்டமானது, அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்கிறது.

பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை சிலர் தூண்டி விடுகிறார்கள். எந்தெந்த அரசியல் கட்சிகள் தங்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் பெறுகிறது என்பதை இந்திய முஸ்லீம் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும். யுசிசி என்ற பெயரில் இப்படிப்பட்டவர்களைத் தூண்டி விடுவதற்கான வேலைகள் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம்.

உண்மையாகவே முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்திருந்தால், முஸ்லீம் சகோதரர்கள் ஏழைகளாகவோ அல்லது தாழ்த்தப்பட்டவர்களாகவோ இருக்க மாட்டார்கள். உச்ச நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. எதிர்கட்சிகள் வாக்கு வங்கிக்காக மட்டுமே இதனைப் பயன்படுத்துகிறது" என பேசினார்.

இதற்கு பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் உள்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அகில இந்திய மஜ்லீஸ்-இ-இடிஹதுல் முஸ்லீமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறுகையில், “இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் பன்மைத்துவத்தை பிரதமர் பிரச்னையாகக் கருதிகிறார். ஒருவேளை அரசியலமைப்புச் சட்ட விதி 29ஐ பிரதமர் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். எனவேதான் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் பன்மைத்துவத்தை குலைக்கப் பார்க்கிறார்” என்றார்.

அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான வேணுகோபால், “மணிப்பூர் கலவரம், நாட்டில் நிலவும் வறுமை, வேலையில்லா நிலை ஆகியவற்றைப் பற்றி பிரதமர் மிகவும் அரிதாக பேசுகிறார். எனவே, முதலில் நாட்டில் நிலவும் வறுமை, விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா நிலை குறித்து பிரதமர் பேசட்டும். மணிப்பூர் கலவரம் பற்றி அவர் ஒருபோதும் பேசியதில்லை” என தெரிவித்தார். மேலும், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய பிரமுகர்கள் கூறுகையில், “ஒபாமாவின் அறிவுரயை பிரதமர் மோடி சரியாக புரிந்து கொள்ளவில்லை. இந்து பிரிவில்லா குடும்பத்திற்கு ஒரு முடிவு இருக்கிறதா?” என கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறுகையில், “பொது சிவில் சட்டத்தைப் பொறுத்தவரை, யுசிசி என்பது விரும்பத்தக்கது. ஆனால், நாம் ஒவ்வொருவரையும் எடுத்துச் செல்ல வேண்டும். நாட்டின் எந்தவொரு சமுதாயத்தையும் நாம் மறக்கக்கூடாது என நேரு கூறி உள்ளார்” என தெரிவித்தார்.

தொடர்ந்து, திமுக மாநிலங்களவை எம்பி டிகேஎஸ் இளங்கோவன், “பொது சிவில் சட்டத்தை முதலில் இந்து மதத்திடம் அறிமுகப்படுத்துங்கள். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் உள்பட அனைவரும் கோயிலில் நடைபெறும் பூஜைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்” என்றார்.

அதேபோல், ஒருங்கிணைந்த ஜனதா தள தலைவர் கேசி தியாகி கூறுகையில், “அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பொது சிவில் சட்ட விவகாரத்தில் உள்ள பிரச்னைகளைக் கூறுகின்றனர். பாஜக மட்டும் இதனை வாக்கு வங்கி அரசியலாக பயன்படுத்துகிறது” என தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல், “ஏன் இந்து - முஸ்லீம் பற்றி மட்டுமே நீங்கள் (பிரதமர் மோடி) சிந்திக்கிறீர்கள்? சத்தீஸ்கரில் பழங்குடியின மக்கள் அதிகம். அவர்கள், அவர்களுக்கான பாரம்பரிய விதிகளை கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் நிலை என்ன?” என சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்து உள்ளார்.

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? நாட்டில் உள்ள பல்வேறு சமூகங்கள், தங்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் திருமணம், விவகாரத்து, வாரிசு மற்றும் தத்தெடுப்பு போன்ற விஷயங்களில் வெவ்வேறு வகையான சட்டங்களைப் பின்பற்றி வருகின்றன. இருப்பினும், அனைத்து சமூகத்திற்கும் பொதுவான ஒரு சட்டமான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது.

இவ்வாறான நாட்டின் 22வது சட்ட ஆணையம் கடந்த ஜூன் 14 அன்று பொது சிவில் சட்டம் பற்றிய பிரச்னையில் மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி உள்ளார். மேலும், இதில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.டி.சங்கரன், பேராசிரியர் ஆனந்த் பாலிவால், பேராசிரியர் டி.பி. வர்மா, பேராசிரியர் ராகா ஆர்யா மற்றும் எம்.கருணாநிதி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதையும் படிங்க: "அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் சிறை செல்வார்" - பாஜக எம்.பி.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.