டெல்லி: இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவிக்கையில், "உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியது முதல் இன்று வரை 20,000 இந்தியர்கள் உக்ரைன் நாட்டின் எல்லை கடந்துள்ளனர். இவர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான போலாந்து, ருமேனியா ஹங்கேரி, பெலாரஸ் நாடுகளிலிருந்து விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுவருகின்றனர்.
இதற்காக ஆப்ரேஷன் கங்காவின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், இந்தியர்களை விரைவாக மீட்கும் நோக்குடன் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் உள்பட 16 விமானங்களை கூடுதாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆப்ரேஷன் கங்கா திட்டம் கடைசி இந்தியர் வெளியேற்றப்படும் வரை தொடரும். உக்ரைனில் உள்ள இந்தியர்களும், அவர்களது உறவினர்களும் கவலைப்பட வேண்டியதில்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹங்கேரியிலிருந்து 219 பேருடன் புறப்பட்ட விமானம் டெல்லி வந்தடைந்தது