ETV Bharat / bharat

பிரிட்ஜில் குழந்தை பலி - விளையாடியபோது நேர்ந்த சோகம் - கோட்டையத்தில் மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழப்பு

கேரளாவில் குளிர்சாதனப்பெட்டியின் பின்னால் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

one and a half year old girl died from a refrigerator in Kottayam  Kottayam  one and a half year old girl died  child death  kerala child dead  electric shock  மின்சாரம் தாக்கி உயிரிழப்பு  குழந்தை குழந்தை உயிரிழப்பு  கோட்டையத்தில் மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழப்பு  குரவிலங்காடு குழந்தை உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழப்பு
author img

By

Published : Sep 4, 2021, 11:31 AM IST

Updated : Sep 4, 2021, 11:37 AM IST

கோட்டயம்: குரவிலங்காடு அருகே உள்ள வெம்பள்ளியில் வசித்துவருபவர்கள் அல்லல் - ஸ்ருதி தம்பதியினர். இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை ரூத் மரியம் அல்லல். இந்நிலையில் குழந்தை ரூத் நேற்று (செப்டம்பர் 3) அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் பின்னால் மறைந்துள்ளது.

மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை

இதில் எதிர்பாராவிதமாக ஃபிரிட்ஜின் வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து குழந்தை தூக்கிவீசப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை குரவிலங்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் குழந்தை வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து குழந்தையின் உடலை மீட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

குளிர்சாதனப் பெட்டியின் பின்னால் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஊர்பியின் படு கிளாமர்: அம்மாடியோவ் விமான நிலையத்திலேயே இப்படியா?

Last Updated : Sep 4, 2021, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.