ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பாஜக தலைவர் சுவேந்து அதிகாரிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் தீவிரமடைந்துவரும் நிலையில், முதலமைச்சர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.
முதலமைச்சர் மம்தாவை விமர்சிக்கும் விதமாக பேசிய சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சிக்குவந்தால் மேற்கு வங்கம் காஷ்மீராக மாறிவிடும் என்று தெரிவித்தார். இதற்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா ட்விட்டரில் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், "சுவேந்து அதிகாரியின் பேச்சு முட்டாள்தனமானது, கண்ணியமற்றது. மேற்கு வங்கம் காஷ்மீர் ஆவதில் தவறொன்றுமில்லை. சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப்பின் பாஜகதான் காஷ்மீரை சொர்க்கமாக மாற்றியுள்ளதே" என கிண்டலடிக்கும் தோனியில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மம்தா மீண்டும் ஆட்சிக்குவந்தால் மேற்கு வங்கம் காஷ்மீராகும்' - சுவேந்து அதிகாரி