ETV Bharat / bharat

பழைய வரிமுறை Vs புதிய வரிமுறை - என்னென்ன வித்தியாசம்! - பழைய வருமான வரி முறை

நடப்பு நிதி அண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரிமுறையில் பல்வேறு மாற்றங்களை அறிவித்தார். பழைய வருமான வரி முறைக்கும் புதிய வருமான வரி முறைக்கும் உள்ள வித்தியாசங்கள் குறித்து பார்க்கலாம்.

வரிமுறை
வரிமுறை
author img

By

Published : Feb 1, 2023, 2:37 PM IST

டெல்லி: தனிநபர் வருமான வரி மத்திய பட்ஜெட்டின் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கான புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், புதிய வருமான வரி முறையை விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

புதிய வரி முறையில், அதிக வரி அடுக்குகளை நடைமுறைப்படுத்தி, குறைந்த வரி விகிதங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இருப்பினும், பழைய வரி முறையின் கீழ் கிடைக்கும் டேக்ஸ் டிடக்‌ஷன் எனப்படும் வரிக் கழிப்பு விலக்குகள், புதிய வரிமுறையில் இருந்து நீக்கப்பட்டன.

பழைய வரி முறையில் வரிப் பொறுப்பைக் குறைக்க வீட்டு வாடகை கொடுப்பனவு எனப்படும் HRA லீவ் டிராவல் அலவன்ஸ், கல்விக் கட்டணம், மருத்துவக் கட்டணம் காப்பீட்டுத் தொகைகள் போன்ற விலக்குகள் இருந்தன. இதன் மூலம் வரி செலுத்துபவர் பல்வேறு வகைகளில் முதலீடு செய்தோ, சேமிப்பு மூலமாகவோ அல்லது செலவு செய்வதன் மூலமோ தங்கள் வரித் தொகையை குறைத்து மதிப்பிட்டு வந்தனர்.

அதேநேரம் புதிய வரி முறையில் கல்விக்கட்டணம், மருத்துவகட்டணம், காப்பீட்டுத்தொகை, வீட்டுக்கடன் போன்ற சலுகைகள் கிடையாது. இது நடுத்தர மற்றும் மாத சம்பளதாரர்களுக்கு பெரும் அதிருப்தியாக இருந்தது. அதேநேரம் வரிக் கழிப்பில் (Tax Deduction) மிகப்பெரிய பிரிவு 80C பிரிவாகும்.

இதன் மூலம் வரி செலுத்துவோர் தங்களின் வரிக்குரிய வருமானத்தை ஒன்றரை லட்ச ரூபாய் வரை குறைக்க முடியும். இது தவிர, வீடு அல்லது கல்விக் கடன்களுக்கான வட்டி, சுகாதார காப்பீட்டிற்கு செலுத்தும் பிரீமியங்கள் முதிலியன விஷயங்களில் வரி விலக்குகளைப் பெற முடியும். மேலும் புதிய வரிமுறையில் 6 அடுக்குகளாக இருந்த வருமான வரிமுறையை 5 அடுக்குகளாக குறைத்து பல்வேறு வரிச் சலுகைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Income Tax: ரூ.7 லட்சம் வரை இனி வரி செலுத்த தேவையில்லை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.