புவனேஸ்வர்: ஆரம்பப் பள்ளிகளை திறக்க கால அவகாசத்தை தள்ளிவைத்து ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் முன் ஜனவரி 3இல் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புகள் வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கலாம் என ஒடிசா அரசாங்கம் முடிவெடுத்திருந்தது.
இந்நிலையில் ஒடிசாவில் மேலும் 424 பேருக்குக் கரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் பரவியதால் மாநில அரசு இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஒடிசாவின் கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஸ் கூறுகையில், 'எங்களின் பழைய முடிவின்படி திட்ட அலுவலர்கள் மாநிலம் முழுவதும் பள்ளிகளை ஆய்வு செய்தனர்.
பல பெற்றோர், பரவலாகத் தாக்கி வரும் கரோனா தொற்றினைக் கண்டு அஞ்சுவதால் பள்ளிகளைத்திறக்கும் முடிவைத் தள்ளி வைத்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் கட்டாயம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்