ETV Bharat / bharat

Odisha Train accident: விபத்து நடந்தது எப்படி? உயிர் தப்பிய பயணியின் பதைபதைக்கும் அனுபவம்! - train accident news

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில், உயிர் தப்பிய பயணி ஒருவர் விபத்து நடந்தது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

train accident
ரயில் விபத்து
author img

By

Published : Jun 3, 2023, 3:49 PM IST

Updated : Jun 3, 2023, 5:08 PM IST

பாலசோர்: ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்றிரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 280க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைப் பறித்து 900ற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளில் மாநில மற்றும் தேசிய மீட்பு படைகள், பேரிடர் மீட்பு படைகள் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர். மேலும் பல்வேறு மாநில முதல்வர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து உள்ளனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த கோர விபத்து குறித்து ரயிலில் இருந்த பயணி ஒருவர் ட்விட்டரில் விவரித்துள்ளார்.

அனுபவ் தாஸ் என்ற பயணி நேற்றிரவு சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயிலில், ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். சோரோ மற்றும் பாலசோருக்கு இடையே, இச்சாபூர் பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஹவுராவில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். இச்சாபூர் அருகே சென்ற போது ரயில் தடம் புரண்டது. அப்போது அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, சில பெட்டிகள் மோதின. அந்த நேரம் எதிர் திசையில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயில், தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

  • As a passenger on the Coromandel Express from Howrah to Chennai, I am extremely thankful to have escaped unscathed. It probably is the biggest train accident related incident. Thread of how the incident unfolded 1/n

    — Anubhav Das (@anubhav2das) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த சம்பவங்களால் நாங்கள் நிலை குலைந்தோம். யஷ்வந்த்பூர் விரைவு ரயிலின் 3 பொதுப்பெட்டிகள் தடம் புரண்டதுடன், முற்றிலுமாக சேதம் அடைந்தன. கோரமண்டல் விரைவு ரயிலின் பொதுப்பெட்டி, ஏசி பெட்டிகள் என 13 பெட்டிகள் முற்றிலுமாக சிதிலமடைந்தன. ஆனால் எந்த பாதிப்பும் இன்றி நான் உயிர் தப்பினேன். என் வாழ்க்கையில் நான் கண்ட மிகப்பெரிய ரயில் விபத்து இதுதான்.

தண்டவாளம் முழுவதும் ரத்தக் களரியாக இருந்தது. படுகாயங்களுடனும், கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் தண்டவாளத்தில் பலர் சடலமாக கிடந்தனர். எப்படியும் 200 முதல் 250 பேர் வரை இறந்திருப்பார்கள். இந்த சம்பவத்தை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். விபத்து நடந்த சில நிமிடங்களில் உதவி கோரி, ரயில்வே அதிகாரிகளுக்கு டிவிட்டரில் அழைப்பு விடுத்தேன்" என அவரது பதிவில் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: Odisha train accident: ரயிலில் பயணித்த 127 பேருடன் பேசினோம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தகவல்

Last Updated : Jun 3, 2023, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.