ETV Bharat / bharat

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் புதிய சாதனை! - Chief Minister of Odisha

ஜோதி பாசுவின் பதிவை முறியடித்து மாநிலத்தின் இரண்டாவது நீண்ட காலம் பதவி வகித்த முதல்வர் எனும் பெருமையை பெற்றுள்ளார் ஒடுசா முதலமைச்சர்.

ஜோதி பாசுவை முறியடித்து அதிக காலம் பதவி வகித்த இரண்டாவது முதல்வர்: 2024 தேர்தலை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்!

author img

By

Published : Jul 23, 2023, 6:35 AM IST

ஒடிசா: ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாழ்க்கையின் முக்கியமான மைல்கல் என இன்றைய (ஜூலை 22) நாளைக் கூறலாம். ஜோதி பாசுவின் பதிவை முறியடித்து மாநிலத்தின் இரண்டாவது நீண்ட காலம் பதவி வகித்த முதலமைச்சர் என்னும் பெருமையை பெற்றுள்ளார், நவீன் பட்நாயக்.

யார் இந்த நவீன் பட்நாயக்? ஒடிசாவின் முதலமைச்சராக கடந்த 20 ஆண்டுகளாக பதவி வகித்து வருபவர், நவீன் பட்நாயக். இவர் 1946ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி கட்டக்கில் பிறந்தார். இவரது பெற்றோர்பிஜூ பட்நாயக் - ஞான தேவி ஆவார். பிஜூ பட்நாயக் ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர். நவீன் பட்நாயக் டேராடூனில் உள்ள வெல்ஹாம் ஆண்கள் பள்ளியில் படித்து, அதன் பின்னர் டூன் பள்ளியில் படித்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், அவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரிக்குச் சென்றுள்ளார்.

அவரது தந்தை பிஜு பட்நாயக் மறைவுக்குப் பிறகு, 1997ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். ஒரு வருடம் கழித்து பிஜு ஜனதா தளத்தை நிறுவினார். அவரது மென்மையான நடத்தை, ஊழலுக்கு எதிராக நிற்கும் குனம் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகள் ஆகியவை ஒடிசாவில் ஒரு பெரிய ஆதரவு தளத்தை அவருக்கு உருவாக்கியது. இதன் காரணமாக கடந்த ஐந்து முறை மக்கள் அவரைத் தொடர்ந்து ஆட்சியில் வைத்துள்ளனர்.

தந்தையைப் போலவே அதிகார வர்க்கத்தை கட்டுப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான இயந்திரமாக மாறியிருக்கிறார், நவீன். கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவர். அவரது மூத்த சகோதரி எழுத்தாளர் கீதா மேத்தா ஆவர்.

நவீன் பட்நாயக்கின் அரசியல் பயணம்: நவீன் அவரது தந்தை பிஜு பட்நாயக்கின் இறப்புக்கு பின்னர் 1997யில் தனது அரசியல் வாழ்க்கையில் நுழைந்தார். பிஜு ஜனதா தளம் என்னும் கட்சியை உருவாக்கி பிஜு பட்நாயக்கின் அரசியல் வாரிசாக அரசியல் களத்தில் இரங்கினார். அவர் 1997 முதல் தற்போது வரை பிஜூ ஜனதா தளத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவர் 1998 முதல் 2000 வரை மத்திய எஃகு மற்றும் சுரங்க அமைச்சராகவும், 1997 முதல் 2000 வரை அஸ்காவின் மக்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

2000ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார், நவீன். 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5-இல் தொடங்கி 5 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். 2000, 2004, 2009, 2014, 2019 என தொடர்ந்து ஆட்சியில் ஜொலித்து வருகிறார், நவீன். இதற்க்கிடையில் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார். பல நிறுவனங்களிடமிருந்து நம்பர் 1 முதல்வர், பிரபல முதல்வர் என்னும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

மாநிலத்தின் முதலமைச்சர் என்பதை கடந்து, அவர் சிறந்த எழுத்தாளர் என்பதை நிரூபிக்கும் வகையில் 3 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். தனது மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டவர், இவர். சமீபத்தில் புரி நகரில் வளர்ச்சிக்காக தனது தந்தையின் சமாதியை அகற்ற உத்தரவிட்டு ஒடிசா மட்டுமின்றி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர், நவீன் பட்நாயக். இவரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது. நவீன் பட்நாயக் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் ஆவார்.

வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பிஜேடியின் நவீனின் தலைமை வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அதிக காலம் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை நவீன் பெறுவார். அவ்வாறு மீண்டும் வெற்றி பெற்றால், வருகிற ஆகஸ்ட் 2024யில் இந்த சாதனையை அவர் உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி.. பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் வழங்க சிபிஎஸ்இ உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.