ETV Bharat / bharat

ரஷ்ய பொறியாளரின் சடலம் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைப்பு! - புதினை விமர்சித்தவர் மரணம்

ஒடிஷாவில் சடலமாக மீட்கப்பட்ட ரஷ்ய பொறியாளர் மிலியாகோவ் செர்ஜியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

odisha
odisha
author img

By

Published : Jan 4, 2023, 1:29 PM IST

ஒடிஷா: ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் அன்டோவ் உள்ளிட்ட நான்கு பேர் கடந்த டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் ஒடிஷாவுக்கு வந்தனர். இவர்கள் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில், டிசம்பர் 22ஆம் தேதி விளாடிமிர் புடானோவ் என்பவர் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவர் இருதய பிரச்சினை காரணமாக இறந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் கழித்து பாவெல் அன்டோவ் என்பவர் அந்த ஹோட்டலில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். இவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு ரஷ்யர்கள் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேநேரம் பாவெல் அன்டோவ் உக்ரைன் போர் தொடர்பாக அவரது சொந்த நாடான ரஷ்யாவை, அதிபர் புதினையும் விமர்சித்து வந்ததாக கூறப்பட்டது. உக்ரைன் போர் குறித்து ரஷ்ய அரசை விமர்சிக்கும் வகையிலான குறுஞ்செய்திகளையும் அவர் பகிர்ந்திருந்தாக கூறப்பட்டது. இதனால், பாவெல் அன்டோவ் மரணம் பேசுபொருளானது.

இதைத் தொடர்ந்து நேற்று(ஜன.3) மற்றொரு ரஷ்யர் சடலமாக மீட்கப்பட்டார். ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து மிலியாகோவ் செர்ஜி(51) என்பவர் சடலமாக கிடைந்தார். அவர் அக்கப்பலின் தலைமைப் பொறியாளர் என தெரியவந்தது. அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை.

இந்த நிலையில், மிலியாகோவ் செர்ஜியின் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். உடற்கூராய்வு முடிந்த பின்னர் சடலம் ரஷ்ய அதிகாரிகளிம் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஒடிசாவில் மேலும் ஒரு ரஷ்யர் மர்ம மரணம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.