கோவிட்-19 அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. அங்கு இரண்டாம் அலை தீவிரமடைந்ததை அடுத்து, 14 நாள்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிப்புகள் அதிகம் காணப்பட்டாலும் கடந்த ஒரு வாரத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது. குறிப்பாக, மும்பை, புனே, நாக்பூர் மாவட்டங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
நாள்தோறும் சராசரியாக, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றிலிருந்து மீண்டுவருகின்றனர். வரும் 30ஆம் தேதியுடன் முடக்கம் முடிவுக்கு வருவதால், இனிவரும் நாள்களிலும் இந்த சாதகமான சூழலை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் அரசு செயல்பட்டுவருகிறது.