கொழும்பு: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று இலங்கை சென்றார். அவர் கடல்சார் பாதுகாப்பு குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
முன்னதாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த ஆலோசனை நவ.27,28 ஆகிய இரு தினங்கள் நடக்கிறது. கடல்சார் பாதுகாப்பு குறித்து நடைபெறும் இந்த ஆலோசனையில் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சரும் கலந்துகொள்கிறார்.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அஜித் தோவல், மாலத்தீவு பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியா தீதி ஆகியோர் தலைமை வகிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உயர் மட்ட பேச்சுவார்த்தையின்போது, கடல்சார் குடியேற்ற விழிப்புணர்வு, சட்ட விதிகள், கடல் மாசுபாடு, தகவல் பகிர்வு, திருட்டு, போதைப்பொருள்கள், ஆயுதங்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட கடல்சார் பாதுகாப்பு குறித்த கூட்டு நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது.
அஜித் தோவலின் இரண்டாவது இலங்கை பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அஜித் தோவல் பேச்சில் உள்கருத்து இல்லை - மத்திய அரசு விளக்கம்