ஒன்றிய அரசு, பான் கார்டுடன், ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என பல நாட்களாக பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகிறது. அதற்காக கொடுக்கப்பட்ட காலக்கெடுவை பலமுறை நீட்டித்த ஒன்றிய அரசு, பான் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதியாக ஜூன் 30ஐ அறிவித்துள்ளது.
பலரும் தற்போது இரண்டையும் இணைத்து வரும் நிலையில், இதனை ஜூன். 30ஆம் தேதிக்கு மேல் இணைப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.
இதனால் ஏற்படும் பிரச்னைகள்;
- இருசக்கர வாகனம் வாங்கவோ, விற்கவோ முடியாது.
- வங்கியில் புதிய கணக்குகளை தொடங்கமுடியாது.
- கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க இயலாது.
- தங்கும், உணவு விடுதிகளில் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் செலுத்த முடியாது.
- வங்கியில் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பத்திரங்கள் வாங்க முடியாது.
இதையும் படிங்க: பான்- ஆதார் இணைப்பு: நீங்கள் செய்ய வேண்டியது என்ன?