ETV Bharat / bharat

வெளியாட்களுக்கு ஜம்மு காஷ்மீரில் வாக்குரிமை வழங்குவதை ஏற்க முடியாது... ஃபரூக் அப்துல்லா பேட்டி... - ஜம்மு காஷ்மீரில் தேர்தல்

வெளியாட்களுக்கு ஜம்மு காஷ்மீரில் வாக்குரிமை வழங்குவதை ஏற்க முடியாது என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

NC
NC
author img

By

Published : Aug 22, 2022, 8:36 PM IST

ஶ்ரீநகர்: சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான தொகுதி மறுவரையறை, வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜம்மு காஷ்மீர் தலைமைத் தேர்தல் அதிகாரி ஹிர்தேஷ்குமார், இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், சுமார் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படலாம் என்றும், இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத புதிய பிரிவினர் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களுக்கும் வாக்குரிமை அளிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அதேநேரம், வெளிமாநிலத்தைச் சேர்ந்த 25 லட்சம் புதிய வாக்காளர் சேர்க்கப்படவுள்ளதாக தவறான தகவல் வெளியாகியுள்ளது என்றும், அதில் உண்மை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருந்தது.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா இன்று(ஆக.22) அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, ஶ்ரீநகரில் உள்ள ஃபரூக் அப்துல்லாவின் வீட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், மெகபூபா முப்தி, விகார் ரசூல், தாரிகாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஃபரூக் அப்துல்லா, "இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் ஆலோசித்தோம். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளின் முடிவும் ஒன்றுதான். வெளியாட்களுக்கு ஜம்மு காஷ்மீரில் வாக்குரிமை வழங்குவதை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த நடவடிக்கை ஜம்மு காஷ்மீரின் அடையாளத்தை அழித்துவிடும். இதுதொடர்பாக சட்டப்போராட்டம் நடத்த ஆலோசித்து வருகிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:சஞ்சய் ராவத்தின் நீதிமன்றக்காவல் செப்.5 வரை நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.