ETV Bharat / bharat

‘நான் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதில்லை’ - குலாம் நபி ஆசாத் திட்டவட்டம் - குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சி

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக வெளிவந்த செய்தியை தொடர்ந்து, தான் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதில்லை என்று குலாம் நபி ஆசாத் ஈடிவி பாரத் மூலம் தெரிவித்துள்ளார்.

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்
author img

By

Published : Dec 31, 2022, 12:12 PM IST

டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் தனது 52 ஆண்டு பிணைப்பை முறித்துக்கொண்டு, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அதன்பின் ஜனநாயக ஆசாத் என்ற கட்சியை தொடங்கினார். இதனிடையே ஆசாத் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, தான் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதில்லை என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இத்தகைய வதந்திகளை காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு சிலர் பரப்பி வருகின்றனர் எனவும், அவர்களது தனது ஆதவாளர்களை திசை திருப்பும் வகையில் இவ்வாறு செய்து வருவதாகம் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

தனிப்பட்ட விதத்தில் காங்கிரஸ் கட்சி மீதும், அதன் தலைவர்கள் மீதும் தனக்கு எந்த கோவமும் இல்லை என கூறிய அவர், இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இது போன்ற வதந்திகளை எந்த ஒரு செய்தி நிறுவனங்களும், ஊடகங்களும் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் ஈடிவி பாரத் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மேல்சிகிச்சைக்காக டெல்லி மாற்றப்படுகிறார ரிஷப் பந்த்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.