ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகேயுள்ள தாவர், கெரன், உரி உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலில், மார்ட்டார் உள்ளிட்ட ஆயுதங்களை பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தியதாகவும், அப்பாவி கிராம மக்களை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கியுள்ளதாகவும் இந்தியத் தரப்பு தெரிவிக்கிறது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர், மூன்று பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, இந்திய ராணுவ படையினர் நடத்திய எதிர் தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் உள்கட்டுமான வசதிகள், ராணுவ முகாம்கள், பதுங்கு குழிகள், ஆயுதக் கிடங்குகள் சேதப்படுத்தப்பட்டன. எல்லைப் பகுதியான கெரன் பகுதியில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'அயோத்தியை இராமாயண நகராக்குவது பிரதமரின் கனவு'- யோகி ஆதித்யநாத்