ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் வெப்பநிலை எப்படி இருக்கும்? - ஐஎம்டி

டெல்லி: தென் இந்தியாவில் சில பகுதிகளில் கோடை காலம் வழக்கமான வெப்பநிலையைவிட குறைவாகவே பதிவாகலாம் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா
இந்தியா
author img

By

Published : Mar 3, 2021, 10:24 PM IST

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மாதத்தில் இருந்தே கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிடும். குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களில் வட இந்தியாவில் வெயில் கொளுத்தி எடுக்கும். இதன்காரணமாக, உயிரிழப்பு கூட நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், மார்ச் முதல் மே வரையிலான காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் (IMD) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "வடக்கு, வடகிழக்கு, மேற்கு மாநிலங்களில் பகல் நேரங்களில் வழக்கத்தைவிட வெயில் சற்று கடுமையாக இருக்கும். தென்னிந்தியாவின், மத்தியப் பகுதியில் வெயில் சற்று குறைவாகவே இருக்கும். சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், கடலோர மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் வெப்பம் வழக்கத்தைவிட 70 விழுக்காடு அதிகமாக இருக்கும்.

ஹரியானா, சண்டிகர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் முன்பை விட 60 விழுக்காடு அதிகமாக வாய்ப்புள்ளது. மொத்தத்தில், மார்ச் - மே காலகட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, கிழக்கு மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்காண்ட், ஒடிசா மாநிலங்களில் வழக்கத்தைவிட 0.5 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் பதிவாகும். தென் இந்தியாவில் சில பகுதிகளில் கோடை காலம் வழக்கமான வெப்பநிலையைவிட குறைவாகவே பதிவாகலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.