ETV Bharat / bharat

நொய்டா இரட்டைக் கோபுரங்களை இடிக்க ஒருவார கால அவகாசம்

நொய்டாவில் கட்டுமான விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடிகள் கொண்ட இரட்டைக் கட்டடத்தை வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நொய்டா இரட்டைக் கோபுரங்கள்
நொய்டா இரட்டைக் கோபுரங்கள்
author img

By

Published : Aug 12, 2022, 7:19 PM IST

டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட 40 மாடிகள் கொண்ட இரட்டைக் கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்படுள்ளதாக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் விதி மீறல் நடந்திருப்பது உறுதியானதால், இரண்டு கட்டடங்களையும் இடிக்க 2014ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்டுமான நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, ஆகஸ்ட் 21ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு கட்டடத்தை இடிக்க உத்தரவிப்பட்டது. இதனிடையே தொழில்நுட்ப வல்லூநர் குழு 40 மாடிகள் கொண்ட கட்டடத்தை இடிப்பதற்கான வெடிபொருள் மற்றும் சென்சார் சாதனங்களை தயார் செய்யவும், அதனை பொருத்தவும் மேலும் ஒரு வாரம் வேண்டும் என்று அவகாசம் கோரியது.

இதனையேற்ற உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 28ஆம் தேதி இடிக்க உத்தரவிட்டது. இதுகுறித்து தொழில்நுட்ப வல்லூநர் குழு தரப்பில், இந்த இரண்டு கட்டடங்களிலும் 9,400 துளைகள் இடப்பட்டு, அதில் 3,500 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேகமாக நிரம்பி வரும் அணையால் 11 கிராமங்களை காலி செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.