ETV Bharat / bharat

கரோனா அறிகுறிகள் தென்படவில்லையா? அலட்சியமாக இருக்காதீர்கள்!

author img

By

Published : Apr 21, 2021, 6:39 PM IST

Updated : Apr 21, 2021, 6:56 PM IST

ஜலதோஷம், இருமல்,காய்ச்சல் போன்ற அறிகுறி தென்பட்டால் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சிறந்த வழிகாட்டுதலுக்காக முதலில், ஒரு பொது மருத்துவரை அணுகுவது சிறந்தது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கரோனா அறிகுறிகள் தென்படவில்லையா? அலட்சியமாக இருக்காதீர்கள்

கரோனா தடுப்பூசி ஒருவழியாக கிடைத்து விட்டது. தொற்றுகளும் கூட குறைந்து வருகின்றன. சென்றுவா கரோனா என்று இதுபோன்ற நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு முன்பே, இரண்டாவது அலை தீவிரம் அடைந்துள்ளது. . தற்போது இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களில் 95 விழுக்காடு நபர்களுக்கு எந்தவிதமான அறிகுறிகளையும் காட்டவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொற்றின் மிகத்தீவிரமான பரவலுக்கு இதுவே முக்கிய காரணம். மறுபுறம், மக்கள் பொதுவான காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் சிறு பிரச்சினைகளை சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்து செல்கின்றனர். இந்த அலட்சியம் தான் பரவலின் தற்போதைய எழுச்சிக்கு மற்றொரு காரணம். உண்மையில், நமக்கு தெரியாமல் தொற்று நம் உடலில் வருகிறது.

கரோனா தொற்று
கரோனா தொற்று

எனவே, கவனிக்க வேண்டிய சரியான அறிகுறிகள் எவை? நம் உடலில் என்ன மாற்றங்களை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்? எப்போது சோதனைக்கு செல்ல வேண்டும்? இது குறித்த தெளிவு பெற, சுகாதார வல்லுநர்கள் கூறுவதை பார்க்கலாம்.

அறிகுறிகள் இல்லாததால், வலுவான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களில், கரோனா தொற்றின் தாக்கம் பொதுவாக மிகக் குறைவு. ஆனால் சில நபர்களிடம் காணப்படும் ஜலதோஷம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உண்மையில் கரோனா தொற்றுநோயாக இருக்கலாம். சரியான சிகிச்சையைப் பெறாமல் இந்த வியாதிகளை அவர்கள் புறக்கணித்து வருகின்றனர்.

நோய்த்தொற்றின் தீவிரத்திற்கும் இணைநோய்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து மருத்துவர்கள் கூறுவதை இன்னும் சிலர் நிராகரிக்கின்றனர். பாதிப்பு எண்ணிக்கை விரைவாக அதிகரிக்க இந்த மூன்று காரணிகளும் காரணமாகின்றன. அதன்படி, சோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை முறையைப் பின்பற்றலாம்.

சிவந்த கண்கள்

பொதுவாக, கண்களில் சிவப்பு, வீக்கம், அரிப்பு மற்றும் நீர் போன்றவை கண் ஒவ்வாமை அல்லது தொற்று என கூறப்படும். தலைவலி அல்லது காய்ச்சலுடன் கூடிய இந்த அறிகுறிகளை பொதுவான கண் வியாதிகளாக நாம் புறக்கணிக்கிறோம். ஆனால் தலைவலி போன்ற சிறு வியாதிகளுடன் சிவப்பு நிற கண்கள் கரோனா தொற்றுநோயாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, விரைந்து சென்று சோதனை செய்வது நல்லது.

சிவந்த கண்கள்
சிவந்த கண்கள்

மறதி

புதிய கரோனா தொற்று நுரையீரலை மட்டுமல்ல, உடலின் எந்தப் பகுதியையும் பாதிக்கும் என்பதை பல அறிவியல் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. உண்மையில், மூளையில் அதன் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டன. கவனச்சிதறல், மறதி, பதட்டம் மற்றும் கவனிப்பதில் சிரமம் ஆகியவை கவனிக்க வேண்டிய அபாய அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென்பட்டால், அவற்றை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள்.

மறதி
மறதி

பசியின்மை

பசியின்மை மற்றும் குமட்டல் போன்றவை சாதாரணமாக தோன்றலாம், ஆனால் தொற்றுநோய் காலத்தில், உணவு பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம். சீனாவில் ஆரம்ப கரோனா நோயாளிகளில் 48 விழுக்காட்டினர் வயிற்று நோய்களைப் பற்றி தெரிவித்தனர். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, குமட்டல், இரைப்பை சிக்கல் மற்றும் பசியின்மை ஆகியவை ஏதேனும் ஒரு பெரிய நோய்க்கான அறிகுறியாக இருக்கும். எதிர்கால ஆபத்துக்களைத் தவிர்க்க ஆரம்பகால சோதனை மற்றும் நோயறிதல் மிக முக்கியமானது.

பசியின்மை
பசியின்மை

களைப்பு மற்றும் சோர்வு

வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ அதிக வேலைப்பளு இருப்பதால் சோர்வாக இருப்பது இயல்பு. ஓரிரு நாட்களில் நாம் இயல்பு நிலைக்கு திரும்புவோம். ஆனால் தீவிர சோர்வு மற்றும் சோம்பல் பல நாட்களாக இருப்பது என்பது ஒரு பெரிய சிக்கலை சுட்டிக்காட்டுகிறது. இந்த அறிகுறிகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு விரைவாக சோதனை செய்ய வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

களைப்பு மற்றும் சோர்வு
களைப்பு மற்றும் சோர்வு

உண்மையில், நோய்த்தொற்றின் போது மட்டுமல்ல, குணமடைந்து சில மாதங்கள் கழித்தும் கூட, பல நோயாளிகள் தீவிர சோர்வு குறித்து கூறியுள்ளனர். எனவே, நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றி சரியான சிகிச்சையைப் பெறுவது நல்லது. இவை தவிர, அதிக காய்ச்சல், தொடர்ந்து வறட்டு இருமல், மார்பு இறுக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை கரோனா தொற்றைக் குறிக்கும் நிச்சய அறிகுறிகளாகும். இது போன்று இருந்தால், உடனே சோதனைக்கு செல்லுங்கள்!

ஆன்டிபாடி சோதனை மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிய உதவும். இந்த ஆன்டிபாடிகளை இரத்த பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். கடந்த காலத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, நோயெதிர்ப்பு அமைப்பு நோய்த்தொற்றை எதிர்க்கும் வகையில் ஆன்டிபாடிகளை வெளியிடுகிறது.

கரோனா தொற்று சோதனை
கரோனா தொற்று சோதனை

எனவே, இரத்தத்தில் ஆன்டிபாடிகள் இருப்பது முந்தைய கரோனா தொற்றைக் குறிக்கிறது. ஆனால், இந்த ஆன்டிபாடிகள் எவ்வளவு காலம் பாதுகாப்பு வழங்கும் என்பது குறித்து உறுதியான முடிவு எதுவும் இல்லை. சில ஆய்வுகள், ஆன்டிபாடி உள்ளவர்கள் மீண்டும் பாதிக்கப்படுவது குறைவு என்று கண்டறிந்துள்ளது.

மொத்தத்தில், நாம் வந்தபின் வருந்துவதை விட பாதுகாப்பாக இருக்குமாறு வல்லுநர்கள் மக்களைக் கேட்டுக்கொள்கிறார்கள். சோதனைக்கு நேரடியாக செல்வதற்கு முன் அல்லது ஆரம்ப அறிகுறியினால் பீதியடைவதற்கு முன், சிறந்த வழிகாட்டுதலுக்காக முதலில் ஒரு பொது மருத்துவரை அணுகுவது சிறந்தது.

Last Updated : Apr 21, 2021, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.