நாட்டின் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் குறித்து முக்கிய கருத்தை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி ஆவணங்கள் செலுத்துவதற்கு விலக்கு அளிக்கப்பட்டது குறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது.
இதற்கு பிரமாணப் பத்திரம் மூலம் பதிலளித்த மத்திய அரசு, மத்திய அரசு, சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி தனிநபரின் ஒப்புதல் இல்லாமல், கட்டாயப்படுத்தி அரசு தடுப்பூசி செலுத்துவதில்லை.
கோவிட்-19 தடுப்பூசி திட்டம் என்பது பெருந்தொற்று காலத்தில் பொதுநன்மைக்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்று. இது குறித்து அரசு தொடர்ந்து விழிப்புணர்வு மேற்கொண்டுவருகிறது. அதேவேளை, எந்தவொரு நபரையும் அவரது விருப்பத்தை மீறி தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்தியதில்லை எனக் கூறியுள்ளது.
இந்தியாவில் இதுவரை சுமார் 157 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 91 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 65 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட்டில் செல்ஃபியால் மாட்டிக் கொண்ட திருடன்