உலகையே உலுக்கிவரும் கோவிட்-19 பெருந்தொற்று இந்தியாவில் கட்டுக்குள் வந்த நிலையில், பிரிட்டன் நாட்டிலிருந்து பரவிவரும் உருமாறிய கரோனா வைரஸ் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த உருமாறிய வைரஸ் தீவிரத்தன்மை அதிகம் கொண்டதாகவும், குறிப்பாக குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் உருமாறிய கரோனா வைரஸ் தாக்கம் குறித்து உயிரியல் வல்லுநரும் சி.சி.எம்.பி. அமைப்பின் இயக்குநருமான ராகேஷ் மிஸ்ரா பேசுகையில், "நாட்டில் புதிய பாதிப்புகள் தொடர்ந்து குறைந்துவருகிறது. அதேவேளை பல உலக நாடுகளில் பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலேயே உருமாறிய கரோனா பரவிவருகிறது.
பெரும்பாலானோருக்கு உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி வைரசின் தன்மைக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்கிறது. எனவே, சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் நோயின் தீவிரம் கட்டுக்குள் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் உருமாறிய கரோனா தொற்று 90ஆக உள்ளது.
இதையும் படிங்க: 'ஸ்டார்ட்-அப் இந்தியா சர்வதேச மாநாட்டில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்' - பிரதமர் மோடி