ETV Bharat / bharat

டெல்லியில் ஊரடங்கிற்கு வாய்ப்பே இல்லை: மணீஷ் சிசோடியா

தலைநகர் டெல்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஊரடங்கு கிடையாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

manish
manish
author img

By

Published : Nov 18, 2020, 9:35 PM IST

டெல்லி: கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஊரடங்கு என்பது சரியான தீர்வு இல்லை என்பதால், டெல்லியில் ஊரடங்கு விதிக்க வாய்ப்பே இல்லை என்று துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாள் முதல் மிகவும் பாதிப்புக்குள்ளான மாநிலம் டெல்லி. கரோனா பாதிப்பு இரண்டாம் அலையை கடந்து தற்போது மூன்றாவது அலையின் உச்சத்தில் இருப்பதாக டெல்லி அரசு அறிவித்தது. கரோனா தொற்றால் கடும் பாதிப்புக்குள்ளான டெல்லியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை என்று அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இதுவரை 4 லட்சத்து 95 ஆயிரத்து 598 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 42 ஆயிரத்து நான்கு பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 4 லட்சத்து 45 ஆயிரத்து 782 பேர் குணமடைந்துள்ளனர். 7 ஆயிரத்து 812 பேர் இறந்துள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கூறுகையில், "கரோனா பாதிப்பு இருந்தாலும் டெல்லியில் ஊரடங்கு விதிக்கும் நோக்கம் இல்லை. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஊரடங்கு சரியான தீர்வு அல்ல. இதற்கு சரியான தீர்வு சிறப்பான மருத்துவத்தை அளிப்பதுதான். முகக்கவசம் அணிவது மட்டுமே ஒரே தீர்வாக அமையும். பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கரோனா காலத்தில் அனைத்து கடைகளும் திறந்திருக்க வேண்டும். கடைக்காரர்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன், அவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால், மக்கள் அதிகமாகக் கூடும் சந்தைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆனால் எந்த வகையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது" என்றார்.

இதையும் படிங்க: நேதாஜி பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க மம்தா கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.