ETV Bharat / bharat

தொகுதிப் பங்கீடு குறித்து பாஜகவுடன் இதுவரை எந்த விவாதமும் செய்யவில்லை: குமாரசாமி கருத்து.! - தொகுதி பங்கீடு

JD(S) leader Kumaraswamy: பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக எடியூரப்பா கூறியதற்கு குமாரசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 6:47 PM IST

பெங்களூரு: 2024ஆம் ஆண்டில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா தெரிவித்திருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி, தொகுதிப் பங்கீடு குறித்து பாஜகவுடன் இதுவரை எந்த விவாதமும் செய்யவில்லை எனவும் எடியூரப்பா கூறிய தகவல் அவரின் தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டத்தொடங்கியுள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான I.N.D.I.A கூட்டணி பல்வேறு வியூகங்களை வகித்து வருகிறது. அதேபோல் மாநிலக் கட்சிகளும் தேர்தல் பணியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து கட்சிகளுக்கு இடையே மறைமுகமாகப் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான எடியூரப்பா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது," கர்நாடகாவைப் பொறுத்தவரை வரும் மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி இணைந்துள்ளதாகவும், இரு கட்சிகளுக்கும் இடையே புரிதல் ஏற்பட்டுள்ள நிலையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும்" கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி, எடியூரப்பாவின் கருத்துக்கு மாறான கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், மக்களவைத் தேர்தல் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே தொகுதிப் பங்கீடு பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்கள் எனவும் பாஜக கூட்டணி அவசியமான ஒன்றாக மக்கள் நினைக்கிறார்கள் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் இது குறித்த தகவல் பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்த பிறகு தெரிவிக்கப்படும் எனவும் குமாரசாமி கூறியுள்ளார்.

எடியூரப்பாவைச் சந்தித்தபோது 4 தொகுதிகள் குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை எனக்கூறிய குமாரசாமி, மரியாதையின் நிமித்தமாக மட்டுமே அவரை சந்தித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இரு கட்சிகளும் கூட்டணி அமைக்குமா? எத்தனை தொகுதிகள் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்படும் உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: "நம்பிக்கையின்மையை அகற்ற மனிதநேய அணுகுமுறையை கடைப்பிடிப்போம்"- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்னுரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.