சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக ஒரு வீடியோ வைரலானது.
அந்த வீடியோவில் ஊடுருவிய சீன ராணுவத்தினரை இந்திய - திபெத் எல்லைக் காவல்படையும், உள்ளூர்வாசிகளும் இணைந்து திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
அரசு விளக்கம்
இந்த வீடியோ குறித்து அரசு தரப்பில் தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது பழைய வீடியோ என்றும், அதிலிருப்பவர்கள் சில உள்ளூர் நாடோடிகள் என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய அரசு அலுவலர் ஒருவர், ”இது முதல் தடவையாக நடக்கவில்லை. கடந்த பல ஆண்டுகளாக இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. சில உள்ளூர்வாசிகள் அங்கு கூடாரங்கள் அடித்து செல்லப்பிராணிகளுடன் சுற்றித் திரிகின்றனர்.
சில சமயங்களில் எல்லைக்கோடுகளையும் தாண்டுகின்றனர். இது ராணுவம் சார்ந்த பிரச்னையில்லை. உள்ளூர்வாசிகளே இப்பிரச்னையைப் பேசி தீர்த்துக் கொள்கின்றனர்” என்றார்.
எல்லையில் கால்நடை மேய்ச்சல்
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் சீனா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக எல்லைப்பகுதிக்கு அருகில் வருவது வழக்கம்.
இந்தியாவைச் சேர்ந்த சிலர் இதனை வீடியோவாகப் பதிவு செய்கின்றனர். இது குறித்து இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினரும் அறிந்தேயிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:காதலியின் கரம்பிடிக்க மோடியின் கையெழுத்து!