இது குறித்து அவர் தெரிவிக்கையில், "பெட்ரோல் விலை ரூ.100 ஐ தொடும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதைப்போல் தற்போது நிலை உருவாகியுள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் பெட்ரோல் ரூ.150, எரிவாயு ரூ.1,250, டீசல் ரூ.140 ஆகிவிடும், ஆகவே மக்கள் மோடி அரசைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அறிவிப்புகள் நடைமுறைக்கு வராமல் அறிவிப்பாகவே உள்ளது. நிதியை கையில் வைத்திருந்து அறிவித்திருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி அரசு தற்போது ஸ்தம்பித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகள் வந்துள்ளதால் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற கருத்து உண்மையில்லை. அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த தடை ஏதும் இல்லை. மக்களை மாநில அரசு ஏமாற்றக் கூடாது.
அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் முதலமைச்சர் ரங்கசாமியால் எடுக்கப்படவில்லை. இதனால் புதுச்சேரி அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. எந்த வேலையும் நடக்கவில்லை, தேர்தல் ஆணையருக்குத் தேர்தல் நடத்திய அனுபவம் இல்லை.
நீதிமன்ற தடை இருப்பதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை விலக்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியும் தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தளர்த்த முடியாது எனக் கூறுவது மாநில தேர்தல் ஆணையரின் ஆணவப்போக்கைக் காட்டுகிறது" என்றார்.
இதையும் படிங்க: பொதுவாழ்வில் பயணிக்கும் எங்களுக்குச் சோதனைகள் வழக்கமானவை - விஜயபாஸ்கர்