ETV Bharat / bharat

புதுச்சேரியில் நிவர் புயலால் வாழை மரங்கள் சேதம் - வாழை

புதுச்சேரி: வில்லியனூர் பகுதியில் நிவர் புயல் காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.

Pondicherry farmers
புதுச்சேரி
author img

By

Published : Nov 27, 2020, 8:22 PM IST

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் நிவர் புயல் காரணமாக ரூ. 1.5 லட்சம் மதிப்பீடு அளவில் வாழை மரங்கள் சேதமடைந்தன. இதில் முத்துப்பிள்ளைபாளையம் பகுதியில் நாராயணசாமி என்பவர் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் 2 ஆயிரத்து 100 வாழை மரங்கள் பயிரிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (நவம்பர் 25) முதல் அதிகாலை ஏற்பட்ட தொடர் சூறாவளி காற்றால் அனைத்து வாழை மரங்கள் விழுந்து சேதமடைந்தன. இதனால் விவசாயி நாராயணசாமி வேதனையடைந்துள்ளார். இவர், நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் சாகுபடி செய்து வந்த நிலையில் தற்போது வாழை மரங்கள் புயலால் சேதமடைந்தன.

இதேபோல் அப்பகுதியில் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதற்கு புதுச்சேரி அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.