ETV Bharat / bharat

இந்திய தேர்தல் வரலாற்றில் இடம்பிடிப்பாரா நிதிஷ்குமார்! - பாட்னா செய்திகள்

பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையை உறுதிசெய்துள்ள என்.டி.ஏ கூட்டணி ஐக்கிய ஜனதாதளக் கட்சி தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் ஆட்சியமைக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் இடம் பிடிப்பாரா நிதிஷ்குமார் !

author img

By

Published : Nov 12, 2020, 7:53 PM IST

Updated : Nov 12, 2020, 10:55 PM IST

நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளுக்குமான முடிவை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று (நவ.11) வெளியிட்டது. பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள - என்டிஏ கூட்டணி பிகாரில் 125 இடங்களில் வென்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பெரும்பான்மையான சட்டப்பேரவைத் தொகுதிகளை வென்றுள்ள ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) தற்போது அடுத்த அரசை அமைப்பதில் கவனம் செலுத்திவருகிறது.

தற்போதைய அரசின் பதவிக்காலம் முடிவதைக் கருத்தில் கொண்டு நவம்பர் மாத இறுதியில், அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பாகு சவுகானுக்கு அனுப்பலாம்.

இதனையடுத்து, பிகார் ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் உரிமை கோரலாம் என தெரிகிறது.

தீபாவளிக்கு அடுத்த வாரம் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் பிகாரில் புதிய அரசு பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பிகார் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் மிக நீண்ட காலம் வீற்றிருக்கும் வரலாற்றை உறுதிசெய்யும் வகையில் நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அமைச்சரவை வரும் திங்களன்றோ (நவம்பர் 16) அல்லது அதற்குப் பிறகோ பதவியேற்கலாம்.

சமதா கட்சியின் தலைவராக முதல் முறையாக மார்ச் 3, 2000 அன்று பிகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார். ஆனால், ஆட்சி நடத்த பெரும்பான்மை இல்லாததால் அவர் குறுகியக் காலத்திற்குள்ளாகவே ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

பின்னர், 2005 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதியன்று இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.

தொடர்ந்து, மூன்றாவது முறையாக நவம்பர் 26, 2010 தேதியன்று முதலமைச்சராக பதவியேற்றார். 2014 ஆம் ஆண்டில், மக்களவைத் தேர்தலில் ஜே.டி.யூவின் மோசமான தோல்வியைக் கருத்தில் கொண்டு, நிதிஷ்குமார் தார்மீக அடிப்படையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, நான்காவது முறையாக முதலமைச்சர் நிதிஷ்குமார் 22 பிப்ரவரி 2015 ஆம் தேதியன்று மீண்டும் பதவியேற்றார்.

லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி உடன் கூட்டணி அமைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 20 தேதியன்று ஐந்தாவது முறையாக பதவியேற்றார்.

இருப்பினும், பணமோசடி வழக்கில் அப்போதைய துணை முதலமைச்நர் தேஜஸ்வி யாதவின் பெயர் வெளிவந்தபோது அவர் 2017 ஜூலை மாதம் 26ஆம் தேதி ராஜினாமா செய்தார்.

ஆர்.ஜே.டி உடனான உறவுகளை முறித்துக் கொண்ட மறுநாளே பாஜகவுடன் கூட்டணியை ஏற்படுத்தி 2017 ஜூலை 27ஆம் தேதியன்று ஆறாவது முறையாக நிதிஷ்குமார் ஆட்சியமைத்தார்.

தற்போது, நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நிதிஷ்குமார் ஆட்சி அரியணை ஏறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என்.டி.ஏ கூட்டணி அரசின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றால், கடந்த இருபது ஆண்டுகளில் ஏழு முறை முதலமைச்சராக பதவியேற்ற ஒரே அரசியல் தலைவர் என்ற சிறப்பை அவர் அடைவார்.

இப்போது வரை, பிகார் முதலமைச்சராக மிக நீண்ட காலம் (17 ஆண்டுகள் 52 நாள்கள்) பதவியை வகித்த ஸ்ரீ கிருஷ்ணா சிங்கின் சாதனையை நிதிஷ்குமார் முறியடிப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Last Updated : Nov 12, 2020, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.