ETV Bharat / bharat

பெகாசஸ் ஊழல் குறித்து விசாரணை தேவை - நிதிஷ் குமார் - பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

பெகாசஸ் ஊழல் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்
author img

By

Published : Aug 2, 2021, 5:40 PM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்த நிலையில், பெரும் அமளி ஏற்பட்டு வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, அரசு உரிய விசாரணை மேற்கொண்டு, உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பெகாசஸ் ஊழல் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். முதன்முறையாக, பாஜக கூட்டணியை சேர்ந்தவர் ஒருவர், பெகாசஸ் ஊழல் குறித்து குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " பல நாட்களாக தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து பேசப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். எதிர்க்கட்சியினர் பல நாள்களாக குரல் எழுப்பி வருகின்றனர்.

இவ்விவகாரத்தில் விசாரணை வேண்டும். முழு விஷயத்தையும் பகிரங்கப்படுத்த வேண்டும். இதில் என்ன நடந்துள்ளது என்பது யாருக்கும் தெரியாது. எனவே, ஒவ்வொரு அம்சத்தையும் மதிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு சம்பவம் குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும், வரும் வியாழக்கிழமை, பெகாசஸ் ஊழல் குறித்து சிறப்பு விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என தெரிகிறது.

இதையும் படிங்க: 'எல்லை விவகாரம்' அசாம் எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.